Essence and scientific facts of Montessori education in Tamil - From Play School in Nehru Nagar Coimbatore,
மொன்டெஸ்ஸோரி பயிற்றுவிக்கும் முறையும், அறிவியல் பின்ன ணியும்
நம் கல்வி முறை சிறந்ததா ?சரியான/தேவையான கல்வியும், கல்விமுறையும் எது ?உங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் , சரியான முறையில் கற்றுகொள்ள வாய்ப்பு உள்ளதா ?
இதைப் பற்றி சிந்திக்காமல் இருக்கும் வரை, இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் கொடுக்க இயலாது .... இது ஒருபுறம் இருக்கட்டும்.
எவரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததையே கொடுக்க விரும்புவார்கள்
ஆனால் முதலில் குழந்தைகளைப் பற்றி அறிந்துகொண்டால் தான் அவர்களுக்கு எது சிறந்தது என்பது நமக்குத் தெரியும். அல்லது சிறந்ததை தேர்வு செய்ய முடியும்...மரியா மொன்டெஸ்ஸோரி (மருத்துவர், கல்வியாளர் மற்றும் சிறந்த சமூகசேவையாளர்)
இவர் 110 வருடங்களுக்கு முன்பாக ஒரு கல்வி முறையை உருவாக்கும் சூழலுக்குள் தன்னை இணைத்துக்கொண்டார்.இவர் அறிவு புகுத்துவது மட்டுமல்லாது, மனித ஆற்றலை வெளிக்கொண்டுவக்ரககூடிய புதிய கல்விமுறை வேண்டும், மற்றும் அதற்கு புதிய அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்தார். அச்சு, முப்பரிமாண பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு "ஏற்கனவே உருவாக்கப்பட்ட கல்வி கற்கும் சூழல் " என்ற பெயரால் கற்கும் வகுப்பறையை வடிவமைத்தார். இப்படிப்பட்ட வகுப்புஅறை உள்ள பள்ளிகளை மொன்டெஸ்ஸோரி பள்ளி என்று கூறுகிறோம். இதைப்பற்றி விரிவாக பார்ப்பதற்கு முன்னால் சில முக்கியமான சான்றுகளை கவனியுங்கள்.
முந்தய பதிவில் கூறியபடி "மிகப்பெரிய தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் மொன்டெஸ்ஸோரி பள்ளிகளில் கல்விகற்றவர்கள் என்பது குறிப்படத்தக்கது "
1. கூகுளை நிறுவியவர்கள் Larry Page and Sergey Brin founder of Google.
2. அமேசானை நிறுவியவர்கள்Jeff Bezos founder of amazon.
3. அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி Jacqueline Bouvier Kennedy Onassis – former first lady (John F. Kennedy)
4. இளவரசர்கள் Prince William and Prince Harry
இன்னும் பல சான்றுகள் உள்ளது .....
நமது தமிழ் நாட்டின் பள்ளிக்கூடங்கள் சில மொன்டெஸ்ஸோரி அணுகுமுறையை பின்பற்ற துவங்கி இருக்குறார்கள். இந்த கல்விமுறை ஏறத்தாழ 110 வருடங்களாக நடைமுறையில் இருக்கிறது, ஆனால் நம் தமிழ் சமூகம் சில ஆண்டுகளாக வெகு சிலருக்ககே இதை கொண்டுபோய் சேர்த்திருக்கிறது.
அடுத்த பதிவில் குழந்தைகளைப்பற்றியும் மொன்டெஸ்ஸோரி வகுப்பு வகுப்பறைகள் பற்றியும் பார்ப்போம்.
Comments
Post a Comment