Why Montessori school ? in Tamil - Nehru Nagar Play School into Montessori Environment
ஹெச்.எஸ்.பி.சி மாண்டிசோரி பள்ளி
(HSBC Montessori school )
சில மாண்டிசோரி பள்ளியில் ( Montessori school ) படித்த மேதைகளின் பெயர்கள் :-
"மிகப்பெரிய தலைமை பொறுப்புகளில் இருப்பவர்கள் மாண்டிசோரி கல்விகற்றவர்கள் என்பது குறிப்படத்தக்கது "
1. கூகுளை நிறுவியவர்கள் Larry Page and Sergey Brin founder of Google.
2. அமேசானை நிறுவியவர்கள்Jeff Bezos founder of Amazon.
3. அமெரிக்க முன்னாள் முதல் பெண்மணி Jacqueline Bouvier Kennedy Onassis – former first lady (John F. Kennedy)
4. இளவரசர்கள் Prince William and Prince Harry
நமது பள்ளி, மாண்டிசோரி கல்விமுறையை உள்வாங்கி "அகிலஉலக மாண்டிசோரி சங்கம் (AMI) " பயிற்சி பெற்றவர்களின் நேரடி கண்காணிப்பில் இயங்கி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் .
இதன் முக்கிய அம்சங்கள்
இந்த கல்வி முறை சுதந்திரமாகக் கல்விகற்பதை வலியுறுத்துகிறது, குழந்தைகளின் இயல்பான உளவியல், உடல் மற்றும் சமூக வளர்ச்சியை கருத்தில் கொண்டு "அச்சு" மற்றும் "முப்பரிமாண" பொருள்கள் மூலமாக உருவாக்கப்பட்ட சூழலே மொன்டெஸ்ஸோரி வகுப்பறை.
இதன் அடிப்படை கூறுகள்
அ) வெவ்வேறு வயது உள்ளவர்கள் ஒரே வகுப்பில் பயில்வார்கள் .
உதாரணமாக:- 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் ஒரே வகுப்பில் பணியாற்றுவார்கள்.
குறிப்பு : இவர்கள் 90 சதம் உபகரணங்கள் மூலமாக பயில்வார்கள். அதனால் இதை வேலை (Work) என்றே இதை அழைக்கிறார்கள்.
ஆ) மாணவர்களே தனக்குப்பிடித்தமான செயற்பாட்டைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
குறிப்பு : வேலை செய்யும் இடத்தில் உள்ள பொருள்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற நுணுக்கமான தகவல்களை (AMI) எ.எம்.ஐ வழிகாட்டி தருவார்.
இ) வேலை நேரம் : இடையூறற்ற மூன்று மணி நேர வேலை நேரம், ஆனால் சுதந்திரமானது.
ஈ) கோட்பாடுகளைத் தாங்களாகவே அறிந்துகொள்வதற்கு ஏதுவாக ஆக்கபூர்வமான அச்சு மற்றும் முப்பரிமாண பொருள்கள் நிறைந்த வகுப்பரறைகள் உள்ளன.
உ) பயிற்றுவிக்கப்பட்ட எ.எம்.ஐ. (AMI) வழிகாட்டி.
ஊ) நான்கு முக்கியமான செய்முறை சூழல்
1) நடைமுறை வாழ்க்கை சம்பந்தமான வேலைகள் (Practical life ) 2) ஐம்புலன்கள் சார்ந்த வேலைகள் ( sensorial ) 3) மொழி அறிவு சார்ந்த வேலைகள் ( language ) 4) கணித அறிவு சார்ந்த வேலைகள் ( mathematics )
மற்றும் , நமது ஹெச்.எஸ்.பி.சி ( HSBC ) மொன்டெஸ்ஸோரி பள்ளிகள்,திருமதி மரியா மொன்டெஸ்ஸோரி அவர்களின் மனித மேம்பாட்டிற்கான மாதிரியையும், அவரது புத்தகங்களையும், அடிப்படையாகக்கொண்டு நமது பள்ளிக்கான செயல்முறை திட்டத்தை நிறுவியுள்ளோம்.
Comments
Post a Comment