Essence and scientific facts of Montessori education in Tamil - From Play School in Nehru Nagar Coimbatore,
மொன்டெஸ்ஸோரி பயிற்றுவிக்கும் முறையும், அறிவியல் பின்ன ணியும் நம் கல்வி முறை சிறந்ததா ? சரியான/தேவையான கல்வியும், கல்விமுறையும் எது ? உங்கள் குழந்தைக்குத் தேவையான அனைத்தையும் , சரியான முறையில் கற்றுகொள்ள வாய்ப்பு உள்ளதா ? இதைப் பற்றி சிந்திக்காமல் இருக்கும் வரை, இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் கொடுக்க இயலாது .... இது ஒருபுறம் இருக்கட்டும். எவரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறந்ததையே கொடுக்க விரும்புவார்கள் ஆனால் முதலில் குழந்தைகளைப் பற்றி அறிந்துகொண்டால் தான் அவர்களுக்கு எது சிறந்தது என்பது நமக்குத் தெரியும். அல்லது சிறந்ததை தேர்வு செய்ய முடியும்... மரியா மொன்டெஸ்ஸோரி (மருத்துவர், கல்வியாளர் மற்றும் சிறந்த சமூகசேவையாளர்) இவர் 110 வருடங்களுக்கு முன்பாக ஒரு கல்வி முறையை உருவாக்கும் சூழலுக்குள் தன்னை இணைத்துக்கொண்டார். இவர் அறிவு புகுத்துவது மட்டுமல்லாது, மனித ஆற்றலை வெளிக்கொண்டுவக்ரககூடிய புதிய கல்விமுறை வேண்டும், மற்றும் அதற்கு புதிய அணுகுமுறை தேவை என்பதை உணர்ந்தார். அச்சு, முப்பரிமாண பொருள்கள் மற்றும் உபகரணங்கள் கொண்...